முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக இயன்முறை மருத்துவ தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : உலக இயன்முறை மருத்துவ தினத்தையொட்டி அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலக இயன்முறை மருத்துவ தினம் உலகளவில் உள்ள இயன்முறை மருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. இத் துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே இயன்முறை மருத்துவத்தைப் பற்றி அதன் நன்மைகளையும் நுட்பங்களையும் எடுத்து சொல்கின்றனர். 

மக்களுக்கு உடலியக்கம், தசை பலம் பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம், மூட்டசைவு என பல விசயங்களையிப்பற்றி விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், இயன்முறை மருத்துவத்தையொட்டி, எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, 

உடல் ஆரோக்கியத்திற்கும், தடையில்லா இயக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும் இயன்முறை மருத்துவத்தின் மகத்துவத்தை சமூகத்திற்கு எடுத்துக் கூறும் நாளாக கொண்டாடப்படும் உலக இயன்முறை மருத்துவ தினத்தில், அனைத்து இயன்முறை மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து