முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறநிலையத் துறைக்கு திராவிட மாடல் ஆட்சிதான் பொற்காலம் : அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      தமிழகம்
Shekhar-Babu 2024-09-08

Source: provided

நெல்லை : திராவிட மாடல் ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொற்கால ஆட்சியாக கருதப்படும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்தார். 

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அம்பலவாணசுவாமி கோவிலில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.  இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது, 

மானூர் அம்பலவாண சுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயில். இந்த கோவிலில் கடைசியாக 117 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடுமுழுக்கு நடந்துள்ளது. 

 இதுவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 37 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இதுவரை 2098 கோவில்களுக்கு தி.மு.க. ஆட்சியில் குடமுழுக்கு நடந்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 55 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.

அம்பலவாண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, கோவில் பணிகளுக்கு செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பணிகள் நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன 16 கோவில்கள், திருப்பணிகள் நடந்து 50 முதல் 100 ஆண்டுகள் ஆன சுமார் 60 கோவில்களுக்கு திருப்பணிகள் நடந்து, குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 

இதுபோல் எண்ணற்ற பணிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொற்கால ஆட்சியாக கருதப்படும். 

அறநிலையத்துறையில் இதுவரை ரூ.5,372 கோடி செலவில் 20,252 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில வல்லுநர் குழுவால் 9,961 கோயில்களில் கட்டிட திருப்பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட ஒரு நாள் போதாது. இந்த சாதனைகள் தொடர்ந்து நடைபெறும்.

கிராமப்புறங்களில், ஆதிதிராவிடர் பகுதிகளில் உள்ள கோயில் திருப்பணிக்கு இதுவரை ரூ. ஒரு லட்சம் மட்டும்தான் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2 லட்சமாக உயர்த்தினார். 

கோவில் திருப்பணிகளுக்கு அறநிலையத்துறையிடம் அனுமதி பெறுவது அவசியம். அனுமதி மறுக்கப்பட்டால் அனுமதி பெற்று தரப்படும். எந்த பணிகளுக்கும் அறநிலையத்துறை தடை விதிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து