முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் புதிய ஆதார் கார்டு பெற கட்டுப்பாடு விதிப்பு : முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      இந்தியா
Himanta-Biswa-Sharma 2024-0

Source: provided

கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு விண்ணப்ப ரசீது எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.  

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில், தேசிய குடியுரிமை பதிவேட்டில் பதிவு செய்வதற்காக, மக்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பிக்குமாறு அசாம் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையை காட்டிலும் கூடுதலானோர் ஆதார் கார்டுகளை சமர்பித்திருப்பது, சட்டவிரோதமாக மக்கள் ஊடுவிருக்கலாம் என்ற சந்தேகத்தை உண்டாக்கியுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, மாநிலத்தின் மக்கள் தொகையை விட அதிகமானோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, துப்ரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே மக்கள் தொகையை விட கூடுதலாக ஆதார் கார்டுகளை சமர்பித்துள்ளனர். 

எனவே, சட்டவிரோதமாக சிலர் குடியேறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  அந்த மாவட்டங்களில் மீண்டும் தேசிய குடியுரிமை பதிவுக்காக மீண்டும் விண்ணப்பங்களை பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகலாம்.

தேசிய குடியுரிமை பதிவுக்கு விண்ணப்பிக்காதவர்கள், புதிதாக ஆதார் கார்டுகளை பெற விண்ணப்பிக்க முடியாது. இந்த விதிமுறைகள் தேயிலை தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது. அக்டோபர் 1-ம் தேதி முதல் பிற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.

என்.ஆர்.சி.(தேசிய குடிமக்கள் பதிவேடு) பதிவேற்றத்தின் போது கைவிரல் ரேகையை பதிவு செய்த, 9.55 லட்சம் பேர் மீண்டும் தங்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இவர்கள் எந்தவித நிபந்தனையுமின்றி ஆதார் அட்டைகளை பெறுவார்கள் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து