முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் நீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      தமிழகம்
Mettur Dam 2023-06-02

சென்னை, மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் வரும் டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது.,

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை பரிசீலித்தப் பின் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு நேற்று முதல் நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் முறையே 27,000 ஏக்கரும், 18,000 ஏக்கரும் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில்11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரை கேட்டுக் கொண்டுள்ளதாலும் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடிக்கு மேல் உள்ளதாலும், 2024-2025-ஆம் பாசன ஆண்டில் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 30.07.2024 முதல் 13.12.2024 வரை 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து