முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாணவர்கள் பலியான சம்பவம்: டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்: உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

புதுடெல்லி, டெல்லியில் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 27-ந்தேதி, பரவலாக பெய்த கனமழையால், பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் தரை தளத்திற்கு கீழே அடித்தளத்தில், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்காக செயல்பட்டு வந்த பயிற்சி மையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. 30 பேர் வரை படித்து வந்த அந்த மையத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் மாணவிகள். ஒருவர் மாணவர் ஆவார். அவர்கள், உத்தர பிரதேசத்தின் அம்பேத்கார் மாவட்டத்தில் வசித்து வந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த நிவின் தல்வின் என தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பயிற்சி மையத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதி மன்மோகன், நீதிபதி துஷார் ராவ் கடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கறிஞர் ருத்ரா விக்ரம் சிங் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் முறையாக தாக்கல் செய்யப்பட்டால், நாளைய தினம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து