முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணமோசடி வழக்கு: நவாப் மாலிக்குக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நவாப் மாலிக்கிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்ததில் மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பேலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்வைத்தது. மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கமான ஜாமீன் மனு நிறைவடையும் வரை மாலிக்கின் மருத்துவ ஜாமீன் செல்லுபடியாகும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை. அதேசமயம் இடைக்கால மருத்துவ ஜாமீன் நிரந்தரமாக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கில் மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மாலிக் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து