முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா, வயநாடு நிலச்சரிவு:உயிரிழப்பு 300-ஐ தாண்டியது 3-வது நாளாக தொடர்ந்த மீட்பு பணி

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      இந்தியா
Wayanad-2024-07-30

Source: provided

வயநாடு: வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. 3-வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தன.

கேரளம் மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம், புதன்கிழமை வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த 179 பேரையும், 4 உடல்களையும் மீட்டனர். 

அட்டமலை, முண்டக்காய் மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் தேடும் பணிகள் வியாழக்கிழமை காலை மீண்டும் தொடங்கி நடைபெற்றது. தேடுதல் குழுவில் ஒரு நாய் படையும் இணைக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றும் பணியில் ஐந்து ஜேசிபிகள் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வயநாட்டில் உள்ள சூரல்மலையில் ஆற்றின் கிளை நதியின் குறுக்கே தற்காலிக பாலம் கட்டும் பணியை ஆயுதப்படையினர் வியாழக்கிழமை காலை மீண்டும் தொடங்கினர். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட முண்டக்காய் மற்றும் அட்டமலை பகுதிகளுக்கு ஆட்கள் மற்றும் கனரக இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு இந்த பாலம் முக்கியமானது. நேற்று பிற்பகலில் பாலம் கட்டுமான பணிகள் முடிந்தன. 

மீட்புக் குழுவினர் நாய்க் குழுவின் உதவியுடன் உயிருக்கு போராடுபவர்களையும், இறந்தவர்களையும் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள், மண் மற்றும் பாறைகளின் அடர்ந்த அடுக்குகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் போன்றவை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக மாறியுள்ளன.  மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிளை ஆறுகள் மற்றும் அதை ஒட்டிய வனப்பகுதிகளில் உடல்களை தேடவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சாலியாரில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் உறவினர்களால் அடையாளம் காண வயநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. வயநாட்டிற்கு வாகனங்கள் அனுமதியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, அவசர தேவைக்கான வாகனங்களுக்கான மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களில் 8,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்ற நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து