முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயர்வு

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து, பவுன் ரூ.51,440-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை,தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.

அதன் பின்னர் ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் காலை பவுன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் விறுவிறுவென குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், தற்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி, நேற்று பவுன் தங்கம் ரூ.80 அதிகரித்து, ரூ.51,440-க்கும், கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.6,430-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்று கிராமுக்கு 70 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.91.70-க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.700 அதிகரித்து, ரூ.91,700-க்கும் விற்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து