முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனம் திறந்த எம்.எஸ்.டோனி

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தெரிவித்துள்ளார். விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ்.டோனி இது குறித்து பேசியதாவது: எனக்கு பிடித்தமான பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிது. ஏனென்றால், அந்த இடத்தில் பும்ரா இருக்கிறார். ஆனால், பிடித்த பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். ஏனெனில், நம்மிடம் நிறைய சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய இருக்கிறார்கள் எனக் கூறுவதால், சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது பொருள் கிடையாது.

அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து சிந்திக்க அதிக நேரம் இருக்கிறது. வீரர்களை தக்க வைப்பதில் என்ன மாதிரியான விதியினை கொண்டுவரப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதனால், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் முடிவு நமது கைகளில் இல்லை. புதிய விதிகள் வந்தபிறகு, அணியின் நலன் கருதி எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.

வைரலான மந்தனா வீடியோ

22 வயதான ஸ்ரேயங்கா பாட்டீல் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 2023 ஆஸ்திரேலிய மகளிரணியுடன் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். மகளிர் கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளும் மகளிர் டி20யில் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இந்நிலையில் 22 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரேயங்கா பாட்டீலை ஸ்இருதி மந்தனா பயமுருத்தும் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவு இன்ஸ்டாவில் 11 மில்லியன் ( 1கோடியே 10 லட்சம்) பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காம்பீர்-கோலி புகைப்படம் வைரல்

தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் காம்பீர் தேர்வாகியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என அசத்தலாக வெனறது. அடுத்து ஒருநாள் தொடர் இன்று (ஆக.2) முதல் தொடங்கவிருக்கிறது. ஒருநாள் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் விராட் கோலி காம்பீர் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே காம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு கோலி குறித்து நல்ல விதமாகவே பேசினார். கோலியும் இது குறித்து எங்களுக்குள் இருக்கும் நட்பு யாருக்கும் தெரியாது. தனிப்பட்ட முறையிலானது எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இருவரும் தில்லையை சேர்ந்தவர்கள். இந்திய ரசிகர்கள் எப்படியோ ஒருவழியாக மோதல் முடிவடைந்து சமாதானம் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். டி20யில் ஓய்வு பெற்ற விராட் கோலி ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சுமன் கெய்க்வாட் காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஞ்சுமன் கெய்க்வாட்(வயது 71) புதன்கிழமை காலமானார். 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அஞ்சுமன் இடம்பெற்றிருந்தார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் அஞ்சுமன். மேலும், இந்திய அணியின் பயிற்சியாளராகவும், தேர்வுக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அஞ்சுமன், லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரின் சிகிச்சைக்காக பிசிசிஐ தரப்பில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருந்தது. இந்திய அணிக்காக சுமார் 22 ஆண்டுகளில் 205 முதல்தர போட்டிகளில் அஞ்சுமன் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 மணிநேரம் களத்தில் நின்று 201 ரன்கள் எடுத்தார்.

இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து