முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதை மறைக்க எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது : எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      தமிழகம்
eps

Source: provided

கரூர் : செந்தில் பாலாஜி 1 வருடமாக சிறையில் இருப்பதை மறைப்பதற்காகவே எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்துள்ளனர் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார் 

சொத்து மோசடி வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அ.தி.மு.க. பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது இல்லத்தில் சந்தித்தார்.

சந்திப்பின் போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் காமராஜ் சிவபதி சின்னசாமி பரஞ்ஜோதி ராஜ்யசபா உறுப்பினர் எம்.பி. தம்பிதுரை, முன்னாள் எம்.எல்.ஏக்கள் வேடசந்தூர் பரமசிவம், சிவசுப்பிரமணியம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், தகவல் தொழல்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் கூறியதாவது., திமுகவைச் சேர்ந்த கரூர் செந்தில் பாலாஜி ஊழல் செய்து 1 வருடமாக சிறையில் இருப்பதை மறைப்பதற்காகவே எம்.ஆர்;.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போட்டு காழ்ப்புணர்ச்சியைக் காட்டியுள்ளனர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது தி.மு.க. வேண்டுமென்றே அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்றார். எடப்பாடி பழனிச்சாமிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து