முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகளின் பல திருத்தங்கள் நிராகரிப்பு: வக்ஃப் திருத்த மசோதா இறுதி செய்தது பார்லி., கூட்டுக்குழு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

புதுடெல்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றக் கூட்டுக்குழு இறுதி செய்துள்ளது. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த 100-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பரிசீலிக்கும் பாராளுமன்ற கூட்டுக்குழுவானது ஆளும் என்.டி.ஏ. கூட்டணி உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டும் எதிர்க்கட்சியினரால் முன்மொழியப்பட்ட திருத்தங்களை நிராகரித்தும் உள்ளது. இறைப் பணிக்காக முஸ்லிம்கள் வழங்கிய சொத்துகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்ஃப் வாரியங்கள் நிர்வகித்து வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினர்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற கூட்டுக் குழுவின் 35-ஆவது கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டு, 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று (திங்கள்கிழமை) மீண்டும் கூட்டம் கூடியதும், எம்.பி.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

பாராளுமன்றக் கூட்டுக் குழுவில், மசோதாவை ஏற்றுக்கொள்ளுமாறு அவசரப்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மசோதாவை தாக்கல் செய்ய ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அவசரப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினர். வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றக் கூட்டுக் குழு இறுதி செய்துள்ளது. இதனை வக்ஃப் வாரிய கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தின் நடவடிக்கைகளை தடுத்ததாகவும் ஜனநாயக நடைமுறையை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பால் குற்றம் சாட்டினார்.

இது கேலிக்கூத்தாக இருந்தது. நாங்கள் கேட்கவில்லை, பால் சர்வாதிகார போக்கில் நடந்து கொண்டார்" என்று திரிணாமூல் கட்சி எம்பி கல்யாண் பானர்ஜி தெரிவித்தார். குழுவால் முன்மொழியப்பட்ட முக்கியமான சட்ட திருத்தங்களில் ஒன்று, தற்போதுள்ள வக்ஃப் சொத்துகளை வக்ஃப் வாரியத்தின் பெயரில் உள்ள சொத்துகள் என்ற அடிப்படையில், யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தற்போதுள்ள சட்டத்திலிருக்கும் விதியை நீக்குகிறது. ஆனால் அந்த சொத்துகள் மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டால் அவற்றை விட்டுவிடலாம் என்று புதிய சட்டதிருத்தத்தில் உள்ளது. இந்த மசோதாவில் என்.டி.ஏ உறுப்பினர்கள் 14 உட்பிரிகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைத்து உட்பிரிவுகளில் முன்மொழிந்த 100-க்கும் மேற்பட்ட திருத்தங்கள், வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து