முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுப் பள்ளிகளே நமது பெருமையின் அடையாளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2022 12 29

Source: provided

சென்னை: அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன். அந்தப் பணி, இன்று (நேற்று) சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் மாடல் பள்ளிகள் எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன். அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையினை திறந்துவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் முதல்வர். தொழில்நுட்ப வளர்ச்சியை வகுப்பறைக்குள்ளும் கொண்டு செல்லும் முயற்சியாக, நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கற்றல் சூழலை உருவாக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணியை 14.06.2024 அன்று முதல்வர் தொடக்கிவைத்தார்.

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திறன்மிகு வகுப்பறையினை திறந்துவைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்.அதன் தொடர்ச்சியாக இன்று 22,931ஆவது திறன்மிகு வகுப்பறையினை சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறுவி மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம். அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 11,76,452 மாணவர்கள் பயனடையும் வகையில், ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் அறிவியல் புரட்சியை நடத்திக்கொண்டிருக்கும் முதல்வருக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து