முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரிகளை உயர்த்தினால்....அமெரிக்க அதிபருக்கு சவால் விடுத்த கனடா

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      உலகம்
Trump 2024-02-17

Source: provided

கனடா: கனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்க இருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

கனடா நாட்டின் மீதான இறக்குமதி வரிகளை 25% அதிகரித்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். இது வருகிற பிப். 1 அன்று நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்டு பேசுகையில், டிரம்ப்பின் வரி விதிப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கான எரிசக்தி விநியோகங்களை துண்டிப்பதன் மூலம் அமெரிக்கர்களுக்கு மின்சாரம் வழங்குவதை குறைக்க கனடா தயாராக உள்ளது.

அமெரிக்காவிற்கு வரும் இயற்கை எரிவாயு மொத்தமும் கனடாவில் இருந்தே வருகிறது. மேலும், அமெரிக்காவின் முக்கிய மின்சார விநியோகமும் கனடாவிலிருந்தே கிடைக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஓன்டாரியோ மாகாணத்தில் 15 லட்சம் அமெரிக்க வீடுகளுக்கு கனடா நேரடியாக மின்சாரம் வழங்கியது. மேலும் மிச்சிகன், மினசோட்டா, நியூயார்க் மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்குவதில் கனடா முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது தொடர்பாகப் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் கனடா மீதான வரிகளைத் தொடர நினைத்தால், கனடா அதற்கான தகுந்த பதில்களை அளிக்கும்” எனத் தெரிவித்தார். இதன்படி, டிரம்ப் தனது முடிவை மாற்றாவிட்டால் வருகிற பிப்ரவரி முதல் அமெரிக்காவிற்கான அனைத்து எரிசக்தி விநியோகங்களையும் கனடா துண்டிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து