முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ம் ஆண்டின் சிறந்த ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பும்ரா

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      விளையாட்டு
Bumra 2023-09-08

Source: provided

துபாய் : ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

மூன்று பெயர்கள்... 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள், டெஸ்ட், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் , வீரங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 3 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்தது. அதன்படி, இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், ஜோரூட் ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

6-வது இந்திய வீரர்...

இறுதியில் இந்த விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா தட்டிச் சென்றார். இவர் கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ராவும் இணைந்துள்ளார். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் (2004), கவுதம் கம்பீர் (2009), சேவாக் (2010), அஸ்வின் (2016), விராட் கோலி (2018) ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து