முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசாவல் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளா படங்கள் வெளியீடு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      உலகம்
Image Unavailable

Source: provided

அமெரிக்கா: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளா புகைப்படங்களை நாசா விண்வெளி வீரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் தேதிமுதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்றனா். இந்த நிலையில் , விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா விண்வெளி வீரரான டான் பெட்டிட் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், 2025 மகா கும்பமேளா இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கங்கை நதி யாத்திரை. உலகில் அதிகளவில் மனிதர்கள் கூடும் இந்த விழா நன்றாக ஒளிர்கிறது என்று குறிப்பிட்டு இரு புகைப்படங்களிப் பகிர்ந்தார். இதன் மூலம், கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்லும் விழா சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து