முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த தகவலால் பரபரப்பு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      தமிழகம்
VCK 2023 06 17

Source: provided

கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மக்கள் மத்தியில் தோன்றுவார் என புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்களை ஒருங்கிணைத்து தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தார்கள். இலங்கையில் உள்ள சிங்கள அரசால் தமிழ் விடுதலைப்புலிகளை அடக்க இயலவில்லை. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் ஆயுத உதவியை பெற்ற இலங்கை அரசு தீவிர போரை மேற்கொண்டது.

2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள படைகளுக்கும் இடையே மிக கடுமையான போர் நடந்தது. அந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மே மாதம் 17-ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது. பிரபாகரன் உடன் அவரது மூத்த மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.

இதனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதில் தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் அடிக்கடி வெளியாகியபடி உள்ளது. பிரபாகரன் நிச்சயமாக மீண்டும் வருவார் என்று பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதிப்பட தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில மூத்த தலைவர்களும் பிரபாகரன் 2009-ல் கொல்லப்பட்டு விட்டதை உறுதி செய்கிறார்கள். இதன் காரணமாக பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. பிரபாகரனுடன் பொட்டு அம்மனும் வர வாய்ப்பு இருப்பதாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவு தலைவரான பொட்டு அம்மனும் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் பிரபாகரனை யார் கண்ணிலும் படாமல் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றது பொட்டு அம்மன்தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒருசாரார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களால் உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் புதிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. பிரபாகரனுடன் நெருக்கமாக பழகியவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் இது தொடர்பாக கேட்டபோது, எனக்கும் அப்படி ஒரு தகவல் வந்து இருக்கிறது என்றார். இதனால் பிரபாகரன் மீண்டும் உயிரோடு வருவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு ஈழ தமிழ் மக்களிடம் உருவாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து