முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் எச்சரிக்கைக்கு அடிபணிந்ததால் கொலம்பியா மீதான இறக்குமதி வரி தடையை நீக்கம்: அமெரிக்கா

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      உலகம்
Trump 2023-04-13

Source: provided

அமெரிக்கா: அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களை கொலம்பிய அரசு ஏற்றுகொண்டதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான வரி மற்றும் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியிருந்த கொலம்பியர்களை கொலம்பியாவுக்கு நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை ஏற்றிவந்த இரு விமானங்களை கொலம்பியாவில் தரையிறக்க அந்நாட்டு அதிபர் அனுமதி அளிக்கவில்லை. குடியேறிய மக்களை பொது விமானங்கள் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும் என்றும் ராணுவ விமானங்களில் அனுப்ப அவர்கள் குற்றவாளிகளில்லை என்றும் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாகக் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கொலம்பிய அதிகாரிகள் மீதான விசா கட்டுப்பாடுகள், கொலம்பிய இறக்குமதிகள் மீதான 25 சதவீதம் வரிகள் கொலம்பிய பொருட்களுக்கான சுங்க ஆய்வுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளை அறிவித்தார்.

அமெரிக்கா புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளைப் போல நடத்துவதை விமர்சித்த கொலம்பிய அதிபர், புலம் பெயர்ந்தவர் குற்றவாளி அல்ல. ஒரு மனிதனுக்குத் தகுதியான கண்ணியத்துடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி, டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருட்களுக்கு 25 சதவீதம் ஏற்றுமதி வரி உயர்வையும் அறிவித்தார். பின்னர், நாடு கடத்தப்படும் மக்கள் திரும்புவதற்காக கொலம்பியா அனுப்பிய விமானங்களை பயன்படுத்துவதை அமெரிக்கா நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள கொலம்பியா ஒப்புக் கொண்டதால் கொலம்பியா மீதான 25 சவீதம் வரி விதிப்பை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டது என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. டிரம்ப்பும் பெட்ரோவும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் அதிபர் டிரம்பின் கடுமையான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்று அமெரிக்கா கருதுகிறது. தற்போது கொலம்பியா அதிபர் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி அந்த மக்களை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தாக அமெரிக்கா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து