முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்: நாட்டு மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்த அமித்ஷா

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      இந்தியா
Amit-Shah 3

புதுடெல்லி,  நாட்டு மக்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மூர்வணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது தேசியக் கொடியான மூர்ணக்கொடி தியாகம், விசுவாசம் மற்றும் அமைதியின் சின்னமாகும். சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 ஆண்டுகளாக முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக இது ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்துள்ளது.

மூர்ணக் கொடியை ஏற்றும் இந்த நிகழ்வு சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட மாவீரர்களை நினைவுகூர்கிறது. தேசம்தான் முதலில் என்ற உறுதிமொழியை எடுக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது. இதற்காக மேற்கொள்ளப்படும் #HarGharTiranga பிரச்சாரம் தேசத்தின் நீள அகலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை ஒற்றுமையை எழுப்புகிறது.

இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தவும், மீண்டும் அதே ஆர்வத்துடன் இதில் பங்கேற்கவும் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நமது பெருமை, நமது மூர்ணக்கொடி. வரும் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூர்வணக்கொடியை நீங்கள் உங்கள் வீடுகளில் ஏற்றி, மூர்ணக்கொடியுடன் செல்ஃபி எடுத்து, அதனை https://hargartiranga.com என்ற இணைதளத்தில் பதிவேற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து