முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
Vande-Bharat-Rail 2023-10-0

Source: provided

புதுடெல்லி : வந்தே பாரத் ரெயில்கள் 130 கி.மீட்டர் வேகத்தில் இயக்கி புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளது இந்திய ரெயில்வே.

மத்திய பா.ஜ.க. அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு ரெயிலையும் தாமே முன்னின்று தொடங்கி வைத்து வருகிறார். 2019 பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது நாட்டில் 130-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவை 8, 16 அல்லது 20 பெட்டிகள் கொண்டதாக காணப்படுகின்றன. அதிகபட்சமாக 760 கிலோமீட்டர் தூரம் வரை இயக்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரசின் அதிகபட்ச பயண நேரம் என்பது 9 மணி நேரம் 5 நிமிடங்கள். அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 8 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டருக்கும் மேல், வேகத்தை எட்டக்கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இந்திய ரெயில்வேயில், ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இதனால் சிறப்பு ரெயில் சேவைகள் கணிசமாக 54 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. அதேசமயம், மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரெயில்கள் செல்லும் அளவிற்கு, 23 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து