முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி உரையுடன் வரும் 31-ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் தொடர் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
Murmu2024-06-27

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுகிறார். முன்னதாக நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவரின் உரையுடன் துவங்குகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்ற இருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என நாடாளுமன்ற செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. இதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர் ஆனது ஜனவரி 31-ந்தேதி தொடங்கும். பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 13-ந்தேதி கூட்டத்தொடர் முடிவடையும்.

2-வது பகுதி கூட்டத்தொடரானது மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி நிறைவடையும். இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனவரி 31-ந்தேதி உரையாற்றுவார். நாடாளுமன்ற இல்லத்தில் உள்ள மக்களவை கூடத்தில் இதற்கான கூட்டம் நடைபெறும்.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி உரையின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். அது பிப்ரவரி 3-ந்தேதி, 4-ந்தேதி மற்றும் 6-ந்தேதி நடைபெறும். இதற்காக அவையின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார். அதனை மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை (ஜனவரி 30-ம் தேதி) அனைத்து கட்சி கூட்டம் ஒன்றிற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி பிப்ரவரி 1-ம் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதாவைும் நிதியமைச்சர் அறிமுகப்படுத்த உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து