முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே எங்கள் இலக்கு: திராவிடத்தால் உருவானது இன்றைய நவீன தமிழ்நாடு : விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      தமிழகம்
CM Stalin 2024-12-10

Source: provided

விழுப்புரம் : எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான், என்று விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் விழுப்புரத்தில் ரூ.133 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் ரூ. 425 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் துவங்கி வைத்தார். 

விழுப்புரத்தில் ரூ.133 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் ரூ. 425 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப்போராளிகளை போற்றும் வகையில், விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் ரூ.5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும், ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை நேற்று (ஜன.28) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ.கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு அமைந்துள்ளது. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மாற்றார்கூட குறை சொல்ல முடியாதவர் ஏ.கோவிந்தசாமி என்று பெரியார் தெரிவித்தார்.

21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை உருவாக்கி 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் உயிர் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது.

வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத்துக்கான தேவைகளை கண்டறியப்பட்டது.

அதன்படி நந்தன்கால்வாய் ரூ.304 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு, ரூ.84 கோடியில் தளவானூர் தடுப்பணை, காணையில் ரூ.35 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாமாத்தூரில் ரூ.4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் ரூ.2 கோடி மதிப்பில் டவுன் ஹால் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கிறேன். என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு.

நமக்கு நிதி ஒன்று தான் தடையாக இருக்கிறது. வேற எந்த தடையும் கிடையாது. நிதி இல்லை என்று புலம்பி கொண்டு இருக்காமல், மக்கள் குறைகளை நீக்கும் அரசாக தி.மு.க., இருக்கிறது. சில எதிர்க்கட்சி தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை அல்ல, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டு இருக்கும் குறைபாடு. அவர்கள் தானும் நல்லது செய்ய மாட்டார்கள், அடுத்தவர்களையும் நல்லது செய்ய விட மாட்டார்கள். மக்களுக்கு நல்லது நடந்தால் சில எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிடிக்காது. அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் எங்களது கடமையை செய்து கொண்டு இருக்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெய்வானை அம்மாள் கல்லூரி வரை சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மனுக்களை பெற்றார்.

முக்கிய அறிவிப்புகள்:

1) சாத்தனூர் அணையின் உபரி நீர் நந்தன் கால்வாயில் கிடைக்கும் வகையில் ரூ.304 கோடி மதிப்பில் திட்டம்.

2) வெள்ளத்தால் சேதமடைந்த தளவானூர் அணைக்கட்டு ரூ.84 கோடியில் புனரமைக்கப்படும்.

3) அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாழாகும் ஆவடி 'அம்மா' திருமண மண்டபம்.

4) சங்கராபாணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் தடுப்பணை.

5)  கோலியனூர் உள்ளிட்ட ஒன்றியங்களில், ரூ.35 கோடியில் கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

6) கக்கன் நகரில் ரூ.1.5 கோடி செலவில் பன்னோக்கு சமுதாயக்கூடம்.

7) செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் தொழில் பயிற்சி நிலையங்கள்.

8) திருவாமாத்தூர் கோவில் இடத்தில் ரூ.4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், உணவருந்தும் இடம்.

9) சாலாமேட்டில் ரூ.5 கோடி செலவில் திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.

10) நகராட்சி அலுவலக கட்டடம் ரூ.2 கோடி செலவில் டவுன் ஹாலாக மாற்றப்படும்.

11) பம்பை ஆற்றின் வடகரையில் அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

12) வீடூர் அணையில் இருந்து மயிலம், பாதிராப்புலியூர் வழியாக செல்லும் சாலை ரூ.2.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து