முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு இந்தியா நாட்டின் வளர்ச்சி இயந்திரம்: பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
Modi PM 2024-12-20

Source: provided

புவனேஸ்வர்: கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரின் நடைபெற்ற 'மேக் இன் ஒடிசா' மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாகக் கருதுகிறேன். அதில் ஒடிசா முக்கிய பங்கு வகிக்கிறது.

மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகிவிடாது. எனவே, நாங்கள் முழு சூழல் அமைப்பையும் மாற்றுகிறோம். ஒரு புதிய தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறோம்.

கனிமங்கள் இங்கு பிரித்தெடுக்கப்பட்டு மதிப்பு கூட்டல் செய்யப்படுவதற்காக; புதிய பொருட்களை தயாரிப்பதற்காக வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் பின்னர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்தப் போக்கு மோடிக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

இது செயற்கை நுண்ணறிவு  சகாப்தம். எல்லோரும் ஏ.ஐ., பற்றிப் பேசுகிறார்கள். இருப்பினும், இந்தியாவின் விருப்பம் வெறும் ஏ.ஐ.,  மட்டுமல்ல. நமது விருப்பம் நமது நாட்டின் சக்தி. 

முன்னோடியில்லாத வேகத்திலும் அளவிலும் சிறப்பு உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இது இந்தியாவை முதலீட்டிற்கான சிறந்த இடமாக மாற்றும். கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக நான் கருதுகிறேன், இதில் ஒடிசா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய வளர்ச்சிக்கு இந்தியா கணிசமாக பங்களித்த காலங்களில், கிழக்கு இந்தியாவும் முக்கிய பங்களிப்பை வழங்கியது என்பதை வரலாறு காட்டுகிறது.

ஒடிசா விரைவில் யாரும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியின் உச்சத்தை எட்டும் என்று நான் நம்புகிறேன். முதல்வர் மோகன் சரண் மஞ்ஜியின் முழு குழுவும் மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒடிசா  மாநிலம் மகத்தான சுற்றுலா ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தியாவில் திருமணங்களை நடத்துவது, மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. நாட்டின் இயற்கை அழகு இதற்கு உகந்ததாக உள்ளது" என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து