முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட இந்தியாவில் கடுங்குளிர்: பொதுமக்கள் கடும் அவதி

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
Delhi 2024-10-28

Source: provided

புதுதில்லி : டெல்லி உள்பட வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தலைநகர் புது தில்லியைப் பொறுத்தவரை, கடந்த 4 நாள்களில் இல்லாத அளவுக்கு நேற்று குளிர் சீதோஷ்ணம் நிலவுகிறது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. வருகிற 1-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் காற்றுத் தரக் குறியீடு 258 ஆக பதிவாகி மோசம் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணாவில் இன்று குளிர் அலை வீச வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வட எல்லையான ஜம்மு காஷ்மீரிலும் உறைபனி வெப்பநிலை வாட்டுகிறது; குளிர் அலையும் வீசுகிறது. ஸ்ரீநகரில் -4.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து