முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      தமிழகம்
EPS 2023 03 27

சென்னை, மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த தி.மு.க. ஆட்சியில் ஏற்படுகிறது.

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின்  தலைகுனியவேண்டும்.

மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது, சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது , 

சட்டம் - ஒழுங்கை காத்திடவும், தொழில் முதலீட்டை தக்க வைக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தி.மு.க. முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து