முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும் : சிதம்பரத்தில் தமிழக கவர்னர் பேச்சு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

கடலூர் : பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்று சிதம்பரத்தில் நடந்த சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

சிதம்பரத்தில் நடந்த சாமி சகஜானந்தாவின் பிறந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக கவர்னர்  ரவி கலந்து கொண்டு பேசுகையில், “இந்த மண் சிவன் பிறந்த மண். இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் இறைவனால் இறைவழி கொண்டவர் சுவாமி சகஜானந்தா. சுவாமி சகஜானந்தா தோன்றிய காலத்தில் நாம் இரண்டு வெவ்வேறு விஷயத்தில் கருத்துகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் .எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்

இரண்டு சக்திகளை எதிர்கொள்ள வேண்டும். அதில் ஒன்று கடவுள் இல்லை என்கிற சக்தி. கால்டுவெல் அமெரிக்க பத்திரிகையில் இந்திய கலாச்சாரம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கால்டுவெல் கூறியது இந்திய கலாச்சாரத்தை நாம் முழுமையாக சீர் கெடுத்தால் மட்டுமே நாம் ஆட்சி செய்ய முடியும் என்று கூறினார். அதனால் மதமாற்றம் இங்கு நடைபெற்றது.

சுவாமி சகஜானந்தா இந்த மண்ணில் சமூக கல்வியாளராக இருந்திருக்கிறார். கல்வி மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்ததை செயல்படுத்தி இருக்கிறார். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாக பிரித்து வைத்துள்ளனர். நாம் அவர்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டும். பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதல்வர் வரவேண்டும். சகஜானந்தாவின் கனவை நிறைவேற்ற உறுதி ஏற்க வேண்டும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், சுவாமி சகஜானந்தா பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.” என்று கவர்னர்  பேசினார். பின்னர் அவர் நந்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து விடுதி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னதாக அவர் சிதம்பரம் ஓம குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து