முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் - லெபனான் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2025      உலகம்
Israel

Source: provided

அமெரிக்கா: இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் வருகிற 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் வருகிற 18-ம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட லெபனான் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் டொனால்டு டிரம்பின் வெள்ளை மாளிகை கூறியது. இது இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையில் சிறிய அளவில் சண்டையை ஏற்படுத்தியது.

தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்நிறுத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. நேற்றும் இஸ்ரேல் படைகள் 22 பேரை கொன்ற நிலையில் போர் நிறுத்தம் என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது என லெபனான் சுகாதார துறை தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து