தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டிக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      இந்தியா
Rahul -2024-08-06

புதுடெல்லி, ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு பிரீமியம் மீதான 18 சதவீத பொருள்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாராளுமன்றத்தின் மகர் துவார் செல்லும் படிக்கட்டிகளில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. ஆர்ப்பாட்டத்தின்போது "வரி பயங்கரவாதம்" என்ற பதாகைகளை கைகளில் ஏந்தி, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியம்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.கள் இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பினர். அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதேபோல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை முடிந்தால் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து