முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் மருத்துவர் கொலை: 9-வது நாளாக போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      இந்தியா
Doctor 2024 08 17

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதி கேட்டு மருத்துவர்களின் போராட்டம் நேற்று 9-வது நாளாகத் தொடர்ந்தது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

பெண் மருத்துவர் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தொடர்ந்து 9 ஆவது நாளாக கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் நேற்றும் ஈடுபட்டுள்ளனர். சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் போராட்டம் நடைபெறும் இடத்தில் புறநோயாளிகளை சோதித்து மருந்து வழங்கி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இதுபோன்று மேலும் சில பகுதிகளிலும் பிற துறையினரும் போராட்டம் நடத்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து