முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? பிரதான தமிழ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      உலகம்
Sri-Lankan-election-2024-09

கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கு  ஆதரவு அளிப்பது என்பது குறித்து பிரதான தமிழ்க் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அக்கட்சி தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

இலங்கையில் வரும் 21-ம் தேதி  அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே,  எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி. தலைவர் அருரா குமார திசநாயக ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. 

இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் விஷயத்தில் பிரதான தமிழ்க் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

அதாவது,  எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 1-ம் தேதி முடிவு செய்தது. அந்த கூட்டணியின் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

ஆனால், இந்த விஷயத்தில் அப்படியொரு முடிவு எடுக்கவில்லை என்றும், தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளர் பி. அரியநேத்திரனை ஆதரிக்கப் போவதாகவும் கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் கூறினார். 

கட்சி மத்திய குழு கூட்டம் நடைபெற்ற போது அவர் பிரிட்டனில் இருந்தார். இது பற்றி கட்சியின் மற்றொரு தலைவரான மாவை சேனாதிராஜா, செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வவுனியாவில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றதாகவும், அப்போது தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதை 15-ம் தேதி வரை ஒத்திவைத்ததாகவும் கூறினார்.

பிரேமதாசாவை ஆதரிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முடிவு இறுதியானது. அது பரிசீலனையில் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார். 

இவ்வாறு தலைவர்கள் எதிரும் புதிருமான கருத்துக்களை கூறி வருவதால், உட்கட்சி பிரச்சினை ஆழமாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முந்தைய அதிபர் தேர்தல்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பானது பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர்களையே ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து