முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      உலகம்
Anthony-Blinkden 1

கீவ், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நேற்றுடன் 925 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. 

இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என அதிபர் புடின் தெரிவித்திருந்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார். 

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராகப் போராடி வரும் உக்ரைன் அரசுக்கு அவ்வப்போது நிதியுதவி செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார். அவர் கீவ் நகரில் அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து