முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஷிங்டன் மாகாண கோவிலுக்கு காஞ்சிபுரத்திலிருந்து செல்லும் தங்கத் தேர்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Kanchipuram 2024-08-31

Source: provided

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் ரூ. ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 4 டன் எடை கொண்ட தேர்  அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

 அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் வேதா என்ற கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலுக்கு காஞ்சிபுரத்தில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட தங்கத் தேரை தயாரித்து பெற இந்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதன்படி காஞ்சியில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 23 அடி உயரத்தில் 4 டன் எடையில் இரும்பு மற்றும் தாமிரத்தைப் பயன்படுத்தி தங்க மூலம் பூசப்பட்ட தேர் ஒன்றை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த தேர் 75 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. 35 டிகிரி அளவுக்கு திரும்பும் வகையிலான தொழில்நுட்பத்துடன் இத்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த இடத்துக்கும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் இந்த தேரை 6 பாகங்களாக பிரிக்க முடியும். 

சிவன், விஷ்ணு என எந்த கடவுளுக்கும் பயன்படுத்தும் வகையில் தேர் அலங்கார பொம்மைகளை பொருத்திக் கொள்ளலாம். இதன் மதிப்பு ரூ.1.25 கோடியாகும். இந்தத் தொகையை சியாட்டில் நகரில் உள்ள வேதா கோவில் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இந்தத் தேர் 6 பாகங்களாக பிரிக்கப்பட்டு  விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து