முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுவதா?- ராமதாசுக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

சென்னை : போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு 20 நாட்களாகியும் இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை. உடனடியாக அவர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். டாக்டர் ராமதாசின் இந்த அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலையிலும், அதில் பணிபுரியும் 1,13,741 சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

இதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு கடந்த 25-ம் தேதி உரிய நிதி ஒதுக்கீடு செய்து ரூ.182.32 கோடியானது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்தும், அறியாதது போல பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. 

நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக் கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து