முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகைக்கு முன்பதிவு: அரசு விரைவு பேருந்துகளில் 29,000 இருக்கைகள் நிரம்பின

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      தமிழகம்
Bus 2023 04 18

சென்னை,  அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு துவங்கியதை தொடர்ந்து, இதுவரை, 29,000க்கும் மேற்பட்ட இருக்கைகள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,100க்கும் மேற்பட்ட சொகுசு மற்றும் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த விரைவு பஸ்களில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர், டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும் அக்., 31ம் தேதி வியாழன் அன்று, தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு துவங்கியுள்ளது. அக்., 29ம் தேதி செல்ல 9,500க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துஉள்ளனர். சென்னையில் இருந்து செல்ல, 7,200க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அக்., 30 தேதியும் 7,900க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், 130க்கும் மேற்பட்ட விரைவு பஸ்களில் முன்பதிவு முற்றிலுமாக நிறைவடைந்துள்ளன. பயணியரின் தேவைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும். பயணியர், www.tnstc.in என்ற இணையதளம் அல்லது டி.என்.எஸ்.டி.சி., செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர, கோயம்பேடு உள்ளிட்ட மையங்களிலும் முன்பதிவு செய்யலாம். தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்கள் இருக்கும்போதே, 29,000க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு முடிந்துள்ளன. இவ்வாறு கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து