முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறிய காரில் வந்தவர் இப்போது, ஷீஷ் மஹாலில் இருக்கிறார் கெஜ்ரிவால் மீது ராகுல் கடும் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

Source: provided

புதுடில்லி : அரவிந்த் கெஜ்ரிவால் வித்தியாசமாக அரசியல் செய்வதாக கூறினார். ஆனால், சிறிய காரில் வந்தவர் இப்போது, ஷீஷ் மஹாலில் இருக்கிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. சமாஜ்வாதி, திரிணமுல், சிவசேனை(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பட்பர்கஞ்ச் தொகுதியில் மேற்கு வினோத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆம் ஆத்மி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக சாடினார்.

மேலும் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “டில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை ஒருபோதும் நேரில் சந்திக்கவில்லை. டில்லியில் வன்முறையால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையிலும் கெஜ்ரிவால் அவர்களைச் சந்திக்கவே  இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வித்தியாசமாக அரசியல் செய்வதாக கூறினார். ஆனால், சிறிய காரில் வந்தவர் இப்போது, ஷீஷ் மஹாலில் இருக்கிறார்.

பட்பர்கஞ்ச் எம்.எல்.ஏ.வும் முன்னாள் டில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுபான ஊழலில் ஈடுபட்டார். அதனால்தான் மணீஷ் சிசோடியா தன்னுடைய பதவியை விட்டு ஓடிவிட்டார்.  அம்பேத்கரின் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசியல் சாசனம் சமத்துவம் பற்றி பேசும் போது கோடீஸ்வரர்களால் நடத்தப்படும் இந்தியாவையே பா.ஜ.க. விரும்புகிறது.  மேலும் சாமானியர்களின் கையிலிருந்து பணத்தை எடுத்து கோடீஸ்வரர்களிடம் கொடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம். அதானியின் நிறுவனத்தின் கட்டுப்பாடு மோடியின் கையில் உள்ளது.  இந்தியாவில் உள்ள 500 பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை யாரும் காண முடியாது. முக்கியமான துறைகளில் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் குறைவாக இருக்கிறது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து