முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.க்கு எதிரான முதல் டி-20: ஆஸ்திரேலியா அபார வெற்றி

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      விளையாட்டு
Australia-win-2024-09-12

லண்டன், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

ஜோஸ் பட்லர் காயம்...

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக அணியின் விக்கெட் கீப்பர் ஃபில் சால்ட் அணியை வழிநடத்தினார்.தி ஏஜஸ் பௌல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் சால்ட் முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தார்.

டிராவிஸ் அதிரடி...

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவில் டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.ருத்ர தாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட், சாம் கரன் வீசிய 5 ஆவது ஓவரில் 3 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி ஒரு ஓவரில் 30 ரன்கள் குவித்து அனைவரையும் வியக்கவைத்தார். டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

86 ரன்கள் குவிப்பு...

பவர்பிளேயான 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களை தாண்டுவது போல தோன்றியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததும் அணியின் ரன் வேகம் குறைந்தது. மேத்யூ ஷார்ட் 4 பௌண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மார்ஷ் 2 ரன்னிலும், விக்கெட் கீப்பர் இங்கிலிஸ் 37 ரன்னிலும், மார்க்ஸ் ஸ்டானிஸ் 10 ரன்னிலும், கிரீன் 13, சீன் அப்பார்ட் 4, ஆடம் ஸம்பா 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டிம் டேவிட் மற்றும் சேவியர் பார்ட்லட் இருவரும் டக் ஆகினர். 19.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் லிவிங்க்ஸ்டன் 3 விக்கெட்டும், ஆர்ச்சர், சகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

180 ரன்கள் இலக்கு...

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. ஃபில் சால்ட் 20 ரன்னிலும், வில் ஜாக்ஸ் 6 ரன்னிலும், ஜோர்டன் 17 ரன்னிலும், லிவிங்க்ஸ்டன் 37 ரன்னிலும், ஜேக்கப் பெத்தெல் 2 ரன்னிலும், சாம் கரன் 18 ரன்னிலும், ஜேமி ஓவெர்டொன் 15 ரன்னிலும், ஆர்ச்சர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 19.2 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சீன் அப்பார்ட் 3 விக்கெட்டும், ஜோஷ் ஹேசல்வுட், ஆடம் ஸம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆஸி., அணி வெற்றி...

இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து