முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூல் லிப் போதைப்பொருள் வழக்கில், 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : கூல் லிப் போதை பொருள் வழக்கில் 3 நி்றுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை ஹான்ஸ் போன்ற புகை பொருட்களை பயன்படுத்தியதாகவும் கூல் லிப் என்ற குட்காவை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் வழக்கு பதிவு செய்து ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதுபோன்ற வழக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் , பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய போதைப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. 

தற்போது பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க போதை பொருட்கள் பயன்பாடே காரணம். கூல் லிப் போதைப்பொருளுக்கு மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது. இதனால் இளம் தலைமுறை சிந்திக்கும் திறன் முற்றிலும் மறைந்து வருகிறது.

குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? போதைப் பொருள் விற்றால் கைது செய்யப்படுகிறார்கள், பிறகு ஜாமினில் வெளியே வந்து விடுகிறார்கள். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விடுகிறது.

போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, மருத்துவ பரிசோதனைகளை செய்வது போன்ற எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என முடிவு செய்ய வேண்டும். 

ஆகவே கூல் லிப்-ஐ பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக் கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், நீதிபதி பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் அரியானா மாநிலத்தை சேர்ந்த சோனேபேட், பகுதியை சேர்ந்த தேஜ்ராம் தரம் பால் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், கர்நாடகா மாநிலம் தும்குரு, அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் ஏரியா, பகுதியை சேர்ந்த வி.ஆர்.ஜி. புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களையும் இந்த வழக்கில் நீதிமன்றமே தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். மேலும் இந்த புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து