முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா ‘டி’ அணி நிதான ஆட்டம்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      விளையாட்டு
India-D-2024-09-19

துலிப் கோப்பையில் மொத்தமுள்ள 6 ஆட்டங்களில் 5 ஆவது ஆட்டத்தில் இந்தியா டி மற்றும் இந்தியா சி அணிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆனந்தபூர் மைதானத்தில் விளையாடி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற இந்தியா பி அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய இந்தியா டி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றும் ஸ்ரீகர் பரத் இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 93 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரீகர் பரத் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 35 ஓவர்கள் முடிவில் இந்தியா டி அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்துள்ளது. நிசாந்த் 1 ரன்னும், ரிக்கி புய் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா சி அணித் தரப்பில் முகேஷ் குமார், நவதீப் சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

124 மீ. சிக்ஸர் அடித்த வீரர் 

கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடர் 2013 ஆம் ஆண்டு முதல் மே.இ.தீவுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தத்தொடரின் நிகழாண்டு போட்டியொன்றில் 124 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அடிக்கப்பட்டுள்ளது. சிபிஎல் தொடரின் 19ஆவது போட்டியில் கைரன் பொல்லார்டின் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் சாய் ஹேப்பின் கயானா அமேசான் வாரியர் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர் 20 ஓவர்களுக்கு 148/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19.2 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த தொடக்க வீரர் ஷக்கரே பாரிஸ் 2.5ஆவது ஓவரில் குடகேஷ் மோட்டி வீசிய பந்தில் 124 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அடித்து அசத்திய இவர் 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த சிக்ஸர் மைதானத்தின் கூரை மீது விழுந்தது. இந்த சிக்ஸர் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் இந்த வீரரை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

லதாம், வில்லியம்சன் அரைசதம்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலே பன்னாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல்நாள் முடிவில் 302/7 ரன்கள் எடுத்திருந்தது. கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 50, மேத்யூஸ் 36, தினேஷ் சண்டிமால் 30 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி 2 ஆம் நாளின் தொடக்கத்தில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் வில்லியம் ரௌர்கே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நியூசிலாந்து அணி 1 ஓவருக்கு 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. டாம் லாதம் 1 ரன், டெவான் கான்வே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதன் பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய டெவான் கான்வே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். 2 வது விக்கெட்டுக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து விளையாடிய டாம் லதாம் மற்றும் வில்லியம்சம் அரைசதம் விளாசினர். அணியின் ஸ்கோர் 136 ஆக இருந்த போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லதாம் 111 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த கேன் வில்லியம்சனும் அரைசதம் விளாசினார்.

ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.  இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரில் நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன் எடுக்க வேகமாக ஓடியபோது, பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகினார். அவருக்கு ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் அணியில் இடம்பெற்று விளையாடுவார என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த வாரத்தில் பென் ஸ்டோக்ஸுக்கு மீண்டும் ஸ்கேன் செய்யப்பட உள்ளது. காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகினார். இதனையடுத்து, ஆலி போப் அணியை கேப்டனாக வழிநடத்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்பாக பென் ஸ்டோக்ஸ் முழுமையாக காயத்திலிருந்து குணமடையாத பட்சத்தில், அணியை மீண்டும் ஆலி போப் கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு படைத்த ஆப்கான்

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 33.3 ஓவர்களில் 106 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக வியான் முல்டர் 52 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி 4 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் கசன்பார் 3 விக்கெட்டுகளும், ரஷித்கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியை முதல் முறையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்னர் ஆடிய போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது. அந்த நீண்ட கால சோகத்திற்கு இந்த வெற்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கோலிக்கு காம்பீரின் பதில்

இந்திய அணி நட்சத்திர வீரரான விராட் கோலியுடன் காம்பீர் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த உரையாடல் நிகழ்ச்சியில் காம்பீர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விராட் கோலி கம்பீரிடம் நீங்கள் ஏன் புதிய பயிற்சியாளராக பதவி ஏற்றீர்கள்? பயிற்சியாளர் பதவி குறித்த உங்களது கருத்து என்ன? என்று கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த காம்பீர் கூறுகையில், "எனக்கு எப்பொழுதுமே சவால் என்றால் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரராக இருக்கும்போது நான் பல சவால்களை கடந்து வந்துள்ளேன். 

தற்போது பயிற்சியாளராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறேன். விளையாடும் காலத்தில் பயிற்சியாளராக வருவேன் என்று நினைத்து கூட பார்த்தது கிடையாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட நான் இதை பற்றி யோசிக்கவில்லை. ஆனால் தற்போது பயிற்சியாளராக சவாலையும் ஏற்றுக் கொண்டு என்னுடைய திறமையை வெளிப்படுத்த இந்த முடிவை நான் எடுத்துக் கொண்டேன். இந்திய அணி அடுத்ததாக பல ஐசிசி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று கூறினார்.

20 ஆண்டுகள் பயிற்சி நடத்த தடை

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரான துலிப் சமரவீரா நடத்தைவிதிகளை மீறி அணியில் இருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டக் குற்றத்துக்காக 20 ஆண்டுகள் பயிற்சியாளராகப் பணியாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

துலிப் சமரவீரா இலங்கை அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்பின்னர் 2008 ஆம் ஆண்டு விக்டோரியா பெண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையின் படி 52 வயதான துலிப் சமரவீரா அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் எந்த கிரிக்கெட் அமைப்பிலும் பணியாற்றக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து