முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.டி.டி. சினிமா, வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2024      சினிமா      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

மதுரை, ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவை எந்த தணிக்கையும் செய்யப்படுவதில்லை. இதனால் நேரடியாக வெளியாகும் இந்த திரைப்படங்களில் ஆபாசக் காட்சிகள் அதிகம் உள்ளன. அதேபோல போதைப்பொருள் பயன்பாடு, வன்முறைக் காட்சிகளும் அதிகம் இடம்பெறுகின்றன. எனவே, ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் என அனைத்தும் தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட வேண்டும்' எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. முதல் விசாரணை முடிவில், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு தணிக்கை அளிப்பது தொடர்பாக மத்திய தொலைதொடர்பு துறை செயலர், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து