எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அன்புமணி ராமதாஸ், பள்ளிக் கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே தெரியவில்லை என்பது கவலையளிக்கும் உண்மையாகும்.
பள்ளிக்கல்வித் துறையின் இயக்குனர் அண்மையில் அத்துறையின் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றில் பணியாற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதை சுட்டிக்காட்டி நேற்று அறிக்கை வெளியிட்ட நான், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஊதிய செலவை மிச்சப்படுத்தும் நோக்குடன், 497 ஆசிரியர்களை விடுதிக்காப்பாளர் பணி செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு விற்கப்போகிறார்களா? என்று வினா எழுப்பி கண்டித்திருந்தேன்.
அடுத்த சிறிது நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இது குறித்து கேட்ட போது,'' இது பற்றி எனக்குத் தெரியாது. இது பி.சி துறையில் வருகிறதா, எங்கள் துறையில் வருகிறதா? எனத் தெரியவில்லை. விசாரித்து விட்டு சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார். ஆசிரியர்கள் விற்பனை தொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனரின் சுற்றறிக்கை கடந்த 7-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின் ஒரு வாரமாகியும் இது குறித்து அமைச்சருக்கே எதுவும் தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அனுப்பும் முடிவை கண்டிப்பாக அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது. இது தொடர்பான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரின் கடிதம் பள்ளிக்கல்வித்துறைக்கு செப்டம்பர் 23-ஆம் நாள் அனுப்பப் பட்டுள்ளது. அதன்பின் 44 நாட்கள் கழித்து தான் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இடைப்பட்ட ஒன்றரை மாதத்தில் பள்ளிக்கல்வித் துறையில் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இது இரு துறைகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நிலையில் விவாதித்து கொள்கை முடிவு எடுக்கப்படாமல், ஆசிரியர்களை இன்னொரு துறைக்கு அனுப்புவது சாத்தியமில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கே தெரியாமல், ஆசிரியர்களை விடுதி காப்பாளர் பணிக்கு அனுப்புவதற்கான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் அனுப்புகிறார் என்றால். அந்த முடிவை எடுத்தவர் யார்?. இந்த வினாவுக்கான விடையை தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. அதை தெரிந்து கொள்ள வேண்டியது மக்களின் உரிமை.
எனவே, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும். விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவை கைவிட வேண்டும். பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்துவதை ஏற்று பள்ளிக்கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இலங்கை அபார வெற்றி
14 Nov 2024நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
-
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
14 Nov 2024தூத்துக்குடி: தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு ரூ.1000 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024அரியலூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
தங்கம் விலை தொடர் சரிவு: சவரனுக்கு ரூ.880 குறைந்தது
14 Nov 2024சென்னை: தங்கம் விலை நேற்றும் சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனையானது.
-
காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு: காங்கிரஸ் கட்சி கூட்டணி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
14 Nov 2024ஜம்மு: காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
14 Nov 2024சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவு
14 Nov 2024சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
மார்க்கோ ரூபியோவை அமெரிக்க வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்ய டிரம்ப் பரிந்துரை
14 Nov 2024வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
-
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டத்தை இன்று அரியலூர் மாவட்டத்தில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க அறிவுறுத்தல்
14 Nov 2024சென்னை: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் இன்று 15-ம் தேதி அன்று முதல
-
7 மாதங்களுக்கு பிறகு நடந்த டெல்லி மேயர் தேர்தல்: வாக்குப்பதிவு மும்முரம்
14 Nov 2024புதுடெல்லி: 7 மாதங்களுக்கு பிறகு டெல்லியில் மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது.
-
3-வது டி-20 போட்டியில் சதம்: திலக்வர்மா குறித்து சூர்யகுமார்
14 Nov 2024செஞ்சூரியன்: அதிரடி சதம்: திலக் வர்மா குறித்து சூர்ய குமார் யாதவ் சொன்ன ரகசியம்
-
8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
14 Nov 2024சென்னை: சென்னையில் நேற்று முதல் (நவ. 14) புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இன்று இயங்காது என அறிவிப்பு
14 Nov 2024புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜவாஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) இன்று (நவ. 15) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்
14 Nov 2024பெர்த்: பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை முன்னிட்டு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை நேற்று தொடங்கினர்.
சுற்றுப்பயணம்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2024.
15 Nov 2024 -
சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 8 முறை 200 ரன்களை கடந்து இந்திய அணி புதிய சாதனை
14 Nov 2024செஞ்சூரியன்: சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரே ஆண்டில் எட்டு முறை 200 ரன்களை கடந்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
ஏற்ற இறக்கத்தோடு நிறைவு பெற்ற இந்திய பங்குச்சந்தை
14 Nov 2024மும்பை: இந்திய பங்குச்சந்தை நேற்று ஏற்ற இறக்கத்தோடு வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
14 Nov 2024சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
-
நலமாக உள்ளேன்: சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜி தகவல்
14 Nov 2024சென்னை: நான் நலமாக உள்ளேன் என்று கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்குவோம்: த.வெ.க. தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து
14 Nov 2024சென்னை: மழலைச் செல்வங்களுக்கு சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி
15 Nov 2024கொழும்பு : இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது.
-
நலமாக உள்ளேன்: சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜி தகவல்
14 Nov 2024சென்னை: நான் நலமாக உள்ளேன் என்று கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ரூ.87.94 கோடியில் திட்ட பணிகள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Nov 2024சென்னை : அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.87.94 கோடி செலவிலான 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.120.04 கோடி
-
வாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரி மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
14 Nov 2024புதுடெல்லி: வாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஐப்பசி பவுர்ணமி: தி.மலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
15 Nov 2024தி.மலை : ஐப்பசி மாத பவுர்ணமியை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்ர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.