முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிப்பு : வாகனங்களை இயக்கவும் கட்டுப்பாடு

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      இந்தியா
Delhi 2024-11-15

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் காற்ற மாசு அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை இயக்கவும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருவதை அடுத்து, காற்று தர மேலாண்மை ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று காலை 8 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. 

அதன்படி, டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை இடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மிக முக்கிய அரசு கட்டுமானப் பணிகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோலில் இயங்கும் பி.எஸ். -3 வகை 4 சக்கர வாகனங்கள், டீசலில் இயங்கும் பி.எஸ். -4 வகை 4 சக்கர வாகனங்களை தேசிய தலைநகர் பிராந்தியம்  மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வெளியில் இருந்து வரும் பி.எஸ். -3  வகை 4 சக்கர வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் காற்றத் தர மேலாண்மை ஆணையம் டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

டெல்லியில் மட்டுமல்லாது, அதை ஒட்டிய மாவட்டங்களான குருகிராம், பரிதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் ஆகிய இடங்களிலும் மாசுபடுத்தும் இத்தகைய நான்கு சக்கர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எலக்ட்ரிக், சி.என்.ஜி. மற்றும் டீசலில் இயங்கும் பி.எஸ்.-6 வகை வாகனங்கள் தவிர அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி டெல்லியின் ஒட்டுமொத்த 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 424 (கடுமையானது) ஆக நேற்று  முன்தினம் மாலை 4 மணிக்கு இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

மேலும், ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை நிறுத்துவது மற்றும் ஆன்லைன் கற்பித்தல் முறைக்கு மாறுவது குறித்து டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையம்  கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம்  டெல்லி யூனியன் பிரதேச சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் கூறியதாவது, 

மாசு பிரச்சினைக்கு டெல்லி மக்கள் மட்டுமே காரணம் அல்ல. என்.சி.ஆர் மாநிலங்களும் அதை ஒட்டிய மாநிலங்களும் சமமாக இதற்கு பொறுப்பேற்க வேண்டும். டெல்லியின் காற்ற மாசு அளவை குறைக்க வேண்டுமானால், உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து