முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் அணியில்: கே.எல்.ராகுல்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      விளையாட்டு
KL-Rahul 2023-08-29

Source: provided

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள கே.எல்.ராகுல், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே எனது இலக்கு. அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வீரராக இருப்பதையே எப்போதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளேன்.

இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதை இன்னும் விரும்புகிறேன். சில காலமாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறாமலிருக்கிறேன். ஒரு வீரராக நான் எங்கு இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு திரும்ப வேண்டும். மீண்டும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற, வருகிற ஐபிஎல் தொடர் எனக்கு உதவியாக இருக்கும் என்றார்.

_____________________________________________________________

அரியாணா வீரர் சாதனை

ரஞ்சி கோப்பையில் கேரளத்துக்கு எதிரான போட்டியில் ஹரியாணா அணியின் வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் காம்போஜ் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குரூப்- சி பிரிவில் இடம்பெற்றுள்ள கேரளம், ஹரியாணா அணிகள் ரோதக்கில் உள்ள சௌதரி பன்ஷிலால் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேரள அணி 116.1 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 30.1 ஓவர்கள் பந்துவீசிய அன்ஷுல் காம்போஜ் 49 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் ஒருவர் 10 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக, 1956 ஆம் ஆண்டில் அஸ்ஸாமுக்கு எதிராக பெங்கால் அணியின் பிரேமாங்ஷூ சட்டர்ஜி (10 விக்கெட்டுகள்/20 ரன்கள்), 1985 ஆம் ஆண்டில் விதர்பா அணிக்கு எதிராக ராஜஸ்தானின் பிரதீப் சுந்தரம் (10 விக்கெட்டுகள்/78 ரன்கள்) எடுத்துள்ளனர். முதல்தரப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தும் 6-வது வீரர் ஆவார். அவர்களைத் தவிர்த்து அனில் கும்ப்ளே, சுபாஷ் குப்தே மற்றும் தேபாஷிஷ் மொகந்தி ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

_____________________________________________________________

இங்கிலாந்து வீரர் விலகல்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகுகிறார். முதல் டி20 போட்டியில் காயம் காரணமாக ரீஸ் டாப்லி அவதிப்பட்டார். அதன் காரணமாக 2,3ஆவது போட்டிகளில் விளையாடவில்லை. முதல் போட்டியில் ரீஸ் டாபிலி ஆடுகளத்தின் உபகரணங்களை உடைத்தாதால் அவராதம் விதிக்கப்பட்டது. ஐசிசியின் லெவல் 1 விதிகளை மீறியதால் 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் ஒரு டீ மெரிட் புள்ளி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

3ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் வென்றது. இதன் மூலம்இங்கிலாந்து அணி மே.இ.தீ. உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என வென்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் ரீஸ் டாப்லி விளையாடமாட்டார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________

மேக்ஸ்வெல் புதிய சாதனை

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்தபோது அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த முதல்வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் மேக்ஸ்வெல். இவர் 6505 பந்துகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பொல்லார்ட், கிறிஸ் கெயில் ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து