முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகிமைபுரத்தில் ரூ. 1000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-11-15

Source: provided

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிப்காட் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷூஸ் நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழகத்தில் டீன்ஷுஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

அந்த வகையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராத்தில் டீன்ஷூஸ் நிறுவனத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்நிறுவனம் தற்போது ரூ.1,000 கோடி முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது. அதற்காக பணியை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக ஜெயங்கொண்டம் நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழுவுருவ சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து