எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர் : தமிழக மக்கள் என் மீதும், தி.மு.க. மீதும் வைத்துள்ள நம்பிக்கை வீணாகாது. இது எடப்பாடி பழனிசாமியை கலங்க வைத்துள்ளது என்று அரியலூரில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அரியலூர் அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பில் 53 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.89.94 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, 21,862 பயனாளிக்கு ரூ.173.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, முதல்வர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அரியலூர் மாவட்டம் கடலாக இருந்து நில பரப்பாக மாறியது. அதனால் தான் இப்பகுதியில் டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. அரியலூர் வளர்ச்சி அடைய வேண்டும் என்றே பல்வேறு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதே போல், பெரம்பலூர் மாவட்டத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவரும் கருணாநிதி தான். ராஜேந்திர சோழனுக்கு ஆடிதிருவாதிரை நிகழ்ச்சியை நடத்துவது நாம் தான். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக ரூ.29 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்றுள்ளது.
நிலக்கரி அனல்மின் திட்டத்துக்கு கையப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும், நிலத்துக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்ப பெறாமல் விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் 243 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்பட்டுள்ளது. குன்னம் பகுதிக்கு கொள்ளிடம் குடிநீர் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 411 ஏக்கர் பரப்பளவில் காரை பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
அமைச்சர் சிவசங்கரின் கோரிக்கையை ஏற்று நதியனூர், ஜெயங்கொண்டம், வெற்றியூர் குடிநீர் திட்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு புதிய கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். வாரணவாசி கிராமதத்தில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை, வாடகை கட்டிடத்தில் இயங்கும் துணை சுகாதார கட்டிடங்களுக்கு அரசு சார்பில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும்.
கால்நடை மருத்துவமனைகள் கூடுதலாக கட்டப்படும். ரூ.24 கோடி செலவில் பெரம்பலூர் மாவட்டத்தில் மருதையாற்றில் உயர்மட்டபாலம், வெங்காய பாதுகாப்புக் கூடம், பெரம்பலூரில் ரூ.56 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை, விடுதி கட்டிடங்கள் கட்டப்படும். அரியலூரில் ஒரே இடத்தில் ரூ.101 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும்.
அப்போது ஒரு சிலர் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். நான் அப்படி இல்லை. சொன்ன திட்டங்களை செயல்படுத்துவேன். என்னை தேடி மக்கள் வருகின்றனர். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். தமிழக மக்கள் என் மீதும், தி.மு.க. மீதும் வைத்துள்ள நம்பிக்கை வீணாகாது. இது எடப்பாடி பழனிசாமியை கலங்க வைத்துள்ளது.
இதனால் அவர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அவரது 4 ஆண்டு கால ஆட்சி காலத்தில் செய்து முடித்துவிட்டு பெருமைப்படுகிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் அது நிஜமாகாது. எடப்பாடி பழனிசாமி நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என சொல்ல முடியுமா?
கமிஷனுக்கு பயந்து முதலீட்டாளர்கள் ஓடினர். நான் முதல்வராக பதவியேற்றப்பின்னர் மீண்டும் தொழில் முதலீட்டாளர்களை அழைத்தேன். இப்போது, பலரும் முதலீடு செய்ய வந்துள்ளனர். எடிப்பாடி பழனிசாமி ஆட்சி எப்போது முடியும் என மக்கள் எதிர்பாா்த்து இருந்தனர்.
மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், இன்று மத்திய மண்டலம் என சுற்றி வருகிறேன். வளர்ச்சியை உறுதி செய்யவே களஆய்வு செய்து வருகிறேன். விருதுநகர் காப்பகத்தில் குழந்தைகளை சந்தித்தேன். அங்கிருந்த குழந்தைகள் என்னை அப்பா என அழைத்தது மனதை நெகிழ வைத்தது.
விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், காலை உணவுத்திட்டம் என பல்வேறு திட்டங்களுடன் தற்போது ஊட்டச்சத்து உறுதித்திட்டத்தை 2-ம் கட்டமாக தறபோது தொடங்கி வைத்துள்ளேன்.
இதனால் 7 லட்சம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அத்திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நலிந்த மக்களுக்கான ஆட்சி இந்த ஆட்சி. குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை கேட்க முடியாது. அதனைச் செய்யவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த குழந்தைகள் நாளை வளர்ச்சி அடைந்த பிறகு, எனது திட்டங்கள் குறித்து பேசுவார்கள். எனது குடும்பம் முன்னேற ஸ்டாலின் ஒரு காரணம் என குழந்தைகள் நாளை சொல்வார்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இலங்கை அபார வெற்றி
14 Nov 2024நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
-
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
14 Nov 2024தூத்துக்குடி: தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு ரூ.1000 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024அரியலூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
தங்கம் விலை தொடர் சரிவு: சவரனுக்கு ரூ.880 குறைந்தது
14 Nov 2024சென்னை: தங்கம் விலை நேற்றும் சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனையானது.
-
காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு: காங்கிரஸ் கட்சி கூட்டணி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
14 Nov 2024ஜம்மு: காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
14 Nov 2024சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவு
14 Nov 2024சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
மார்க்கோ ரூபியோவை அமெரிக்க வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்ய டிரம்ப் பரிந்துரை
14 Nov 2024வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
-
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டத்தை இன்று அரியலூர் மாவட்டத்தில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க அறிவுறுத்தல்
14 Nov 2024சென்னை: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் இன்று 15-ம் தேதி அன்று முதல
-
7 மாதங்களுக்கு பிறகு நடந்த டெல்லி மேயர் தேர்தல்: வாக்குப்பதிவு மும்முரம்
14 Nov 2024புதுடெல்லி: 7 மாதங்களுக்கு பிறகு டெல்லியில் மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது.
-
3-வது டி-20 போட்டியில் சதம்: திலக்வர்மா குறித்து சூர்யகுமார்
14 Nov 2024செஞ்சூரியன்: அதிரடி சதம்: திலக் வர்மா குறித்து சூர்ய குமார் யாதவ் சொன்ன ரகசியம்
-
8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
14 Nov 2024சென்னை: சென்னையில் நேற்று முதல் (நவ. 14) புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இன்று இயங்காது என அறிவிப்பு
14 Nov 2024புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜவாஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) இன்று (நவ. 15) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்
14 Nov 2024பெர்த்: பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை முன்னிட்டு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை நேற்று தொடங்கினர்.
சுற்றுப்பயணம்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2024.
15 Nov 2024 -
சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 8 முறை 200 ரன்களை கடந்து இந்திய அணி புதிய சாதனை
14 Nov 2024செஞ்சூரியன்: சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரே ஆண்டில் எட்டு முறை 200 ரன்களை கடந்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
ஏற்ற இறக்கத்தோடு நிறைவு பெற்ற இந்திய பங்குச்சந்தை
14 Nov 2024மும்பை: இந்திய பங்குச்சந்தை நேற்று ஏற்ற இறக்கத்தோடு வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
14 Nov 2024சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
-
நலமாக உள்ளேன்: சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜி தகவல்
14 Nov 2024சென்னை: நான் நலமாக உள்ளேன் என்று கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்குவோம்: த.வெ.க. தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து
14 Nov 2024சென்னை: மழலைச் செல்வங்களுக்கு சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி
15 Nov 2024கொழும்பு : இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது.
-
நலமாக உள்ளேன்: சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜி தகவல்
14 Nov 2024சென்னை: நான் நலமாக உள்ளேன் என்று கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ரூ.87.94 கோடியில் திட்ட பணிகள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Nov 2024சென்னை : அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.87.94 கோடி செலவிலான 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.120.04 கோடி
-
வாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரி மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
14 Nov 2024புதுடெல்லி: வாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஐப்பசி பவுர்ணமி: தி.மலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
15 Nov 2024தி.மலை : ஐப்பசி மாத பவுர்ணமியை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்ர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.