முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடர்: முதல் இன்னிங்சில் தமிழகம் 438 ரன்கள்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      விளையாட்டு
Tamil-Nadur 2024-11-15

Source: provided

அகமதாபாத் : ரஞ்சி டிராபி தொடரில் ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில். முதல் இன்னிங்சில் தமிழகம் 438 ரன்கள் குவித்துள்ளது.

பல நகரங்களில்...

90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் 5வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக அணி ரெயில்வே அணியை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

229 ரன்னுக்கு அவுட்....

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி 229 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், லக்சய் ஜெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டை இழந்து 324 ரன்கள் குவித்திருந்தது.

438 ரன்கள் குவிப்பு...

தமிழகம் தரப்பில் முகமது அலி 37 ரன்னுடனும், அஜித் ராம் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்துள்ளது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக முகமது அலி 91 ரன்கள் எடுத்தார். ரெயில்வே தரப்பில் குனால் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் தமிழக அணி 209 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து ரெயில்வே தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து