முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் இருந்து திரும்பி அண்ணாமலை வந்தாலும் எதுவும் மாறாது: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      தமிழகம்
Raghupati 2024-10-28

புதுக்கோட்டை, அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் எனும் படிப்பிற்காக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில்  லண்டன் சென்றார். லண்டனில் உள்ள  ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகத்தில் மூன்று மாத கால படிப்பை முடித்து விட்டு அண்ணாமலை வரும் 28 ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

அண்ணாமலை தமிழகம் திரும்பியதும் தனது வழக்கமான அதிரடி அரசியல் பாணியை கையில் எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு அமைச்சர் ரகுபதி அளித்த பதில்கள் வருமாறு:-

அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை. எம்.ஜி.ஆர் பாணியை விஜய் பின்பற்ற பார்க்கிறார். எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. சர்வாதிகாரிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்றார். 

நெல்லையில் நேற்று கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய சீமான், ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். சர்வாதிகாரம் இல்லாது எந்த செயலையும் சரி செய்ய முடியாது எனப்பேசியிருந்தார். சீமானை மறைமுகமாக குறிப்பிட்ட  ரகுபதி, சர்வாதிகாரிகளுக்கு இடமில்லை என்று விமர்சித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து