முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலுக்கு இன்று செல்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி : நம்பிக்கை ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      இந்தியா
Jagan-Mohan 2024-03-27

Source: provided

திருப்பதி : ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திருமலைக்கு செல்கிறார். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாங்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு சார்பில் சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறும் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பொய்யான குற்றச்சாட்டுகளால் திருப்பதி ஏழுமலையானின் புனிதம் கெட்டு விட்டது. 

ஆந்திராவில் உள்ள அனைத்து கோயில்களிலும்  28-ம் தேதி(இன்று) ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை களை நடத்த வேண்டும். அப்போது தான் ஆந்திராவின் இழுக்கு கழுவப்படும் என்று அழைப்பு விடுத்திருந்தார். 

அதை தொடர்ந்து இன்று ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு செல்லவுள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று அவர் திருமலைக்கு அலிபிரி வழியாக பாதயாத்திரையாக நடந்து சென்று, சுவாமியை வழிபட திட்டமிட்டு உள்ளார். 

இந்த நிலையில் அவரை திருமலையில் அனுமதிக்கக் கூடாது என்று இந்து அமைப்பினர், பா.ஜ.க., ஜனசேனா கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.  ஜெகன் மோகன் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து