முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-Modi 2024-03-27

Source: provided

சென்னை : டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை  உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை  விடுத்தார். 

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி அமெரிக்கா சென்றார்.  19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 14-ம்தேதி அவர் சென்னை திரும்பினார். 

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 

மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்  என்று கூறினார். இந்த நிலையில்  பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம்  மாலை  புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் இரவு  டெல்லி சென்றடைந்தார். முதல்வருடன், அரசின் தலைமை செயலர் முருகானந்தம், முதல்வரின் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றனர்.  

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி அவரை இன்முகத்துடன் வரவேற்றார். பிரதமருக்கு சால்வை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார். 

அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார். பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை  பிரதமர் மோடிக்கு முதல்வர் பரிசளித்தார். 

நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டியை பிரதமர் மோடிக்கு  பரிசளித்தார்.   அப்போது அவர் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து