முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்:மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Central-government 2021 12-

புது டெல்லி, இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 2022-23 ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் குறித்த வருடாந்தர மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. அதில் உற்பத்தி துறையில் பங்களிக்கும் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன், வேலை வாய்ப்பு மூலதன உருவாக்கம் போன்றவற்றின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாகவும், அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலமாகவும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 

இந்தியாவில் மொத்தமுள்ள சுமார் 2 லட்சத்து 53 ஆயிரம் தொழிற்சாலைகளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக குஜராத்தில் 31ஆயிரம் தொழிற்சாலைகளும், மராட்டியத்தில் சுமார் 26 ஆயிரம் தொழிற்சாலைகளும் உள்ளன. 

உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தொழிற்சாலைகளில் அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்களிலும் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் சுமார் ஒரு கோடியே 85 லட்சம் வேலை வாய்ப்புகளில் தமிழகத்தில் மட்டும் 15 விழுக்காடு அதாவது சுமார் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்து உள்ள மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களில் சுமார் 23 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து