முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காற்று மாசு அபாய அளவில் நீடிப்பு

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      இந்தியா
Delhi-Air-pollution

டெல்லி, டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது. நேற்று காலை நிலவரப்படி டெல்லி காற்று மாசின் அளவு 433 ஆக பதிவானது. இந்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்தில் இருந்து 50 வரை இருந்தால் "நல்லது" என்றும் 51 முதல் 100 வரை இருந்தால் "திருப்திகரமானது" என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் "மிதமானது" என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் "மோசமானது" என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் "மிகவும் மோசமானது" என்றும் 400 முதல் 500 வரை இருந்தால் "அபாயகரமானது" என்றும் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில், நேற்று டெல்லியில் காற்றின் தரம் அபாயகர அளவில் இருந்தது. அங்கு நேற்றைய வெப்பநிலை 7.5 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலையை பொருத்தவரை பகலில் மேகமூட்டமாக காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரும் 2025-ம் ஆண்டு முதல் அனைத்து வகையான பட்டாசுகளை வெடிக்க விற்க தடைவிதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து