முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் தள்ளுமுள்ளு: ராகுலை விசாரிக்க தனிக்குழு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-12-03

புதுடெல்லி, அம்பேத்காரை பற்றி அமித்ஷா பேசியதாவல் பாராளுமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ராகுல் காந்தி தள்ளி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை போலீசார் விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.

பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்து 2 பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் தங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தள்ளி விட்டதாக குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ராகுல் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தள்ளுமுள்ளு ஏற்பட்ட பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

காயம் அடைந்த பா.ஜ.க. எம்.பி.க்களிடம் வாக்கு மூலம் பெற குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் ராகுலிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிய வந்து உள்ளது.

ராகுலை விசாரிப்பதற்காக டெல்லி போலீசார் தனி சிறப்பு குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் இது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். சபாநாயகர் ஒப்புதல் அளித்ததும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து